தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புகைப்படங்கள் மற்றும் வாள் ஒன்றுடன் கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதயபுரம் பகுதியில் வைத்து சந்தேகநபரான 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து வாள் ஒன்றும் இரண்டு கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும் ஆவா குழுவின் புகைப்படங்கள் இவரது கைத்தொலைபேசியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.