நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் வாழ்க்கை செலவு குழு இன்று கூடி ஆராய்ந்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று கூடிய குழு , இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த கலந்துரையாடலில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து மிக ஆழமாக ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கலந்துரையாடலில் நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக்கொண்டு, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை இல்லாது செய்வது தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அமைச்சரவை கூட்டத்தில் இந்த பரிந்துரைகளுக்கு அனுமதி கிடைத்ததன் பின்னர், இறுதித் தீர்மானம் எட்டப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.