15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

முச்சக்கர வண்டியில் வைத்து மர்ம பொருட்களை கடத்திச் சென்றவருக்கு நேர்ந்த கதி!

அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டியில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 3 பொதிகளில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டியும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

திணறும் இலங்கை! இக்கட்டான கட்டத்தில் கை கொடுக்கத் தயாராகும் நாடு

SudarSeithy

கனடாவில் இலங்கை தமிழ் இளைஞர் உட்பட பலர் கைது!

SudarSeithy

மாணவனின் உயிரை பறித்த கைப்பேசி: கதறி அழும் தந்தை!

SudarSeithy

Leave a Comment