14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

மன்னார் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட 672 கிலோ உலர்ந்த மஞ்சள் மூடைகள்!

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகளை இன்று (08) அதிகாலை 2.30 மணி அளவில் மன்னார் பெரியகடை கடற்கரை கலப்பு பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட இராணுவத்தினர், மன்னார் பெரியகடை கடற்கரை கலப்புப் பகுதியில் வைத்து சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 18 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 672 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகளை இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வள்ளங்கள் 3 ம் மற்றும் பட்டா ரக வாகனமும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

குறித்த பொருட்கள் இன்று (08) காலை 9 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் மக்களை ஒடுக்க இந்தியா வழங்கிய அதிதொழில்நுட்ப உதவி

SudarSeithy

யாழில் சும்மா சுற்றிவர்களுக்கு “துரித அன்டிஜன் பரிசோதனை”

SudarSeithy

கை மீறிச் சென்றது குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு!

SudarSeithy

Leave a Comment