கொரோனா குறித்த திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின் புதிய தொகுப்பு சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட உள்ளது.
சுகாதார வழிகாட்டுதல்கள் பல திருத்தப்பட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்கும் எனவும், பல கட்டுப்பாடுகளை நீக்கப்படவுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களை திருமண வைபவங்களில் கலந்து கொள்ள அனுமதிப்பது போன்ற புதிய விதிமுறைகளைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.
தற்போதைய வழிகாட்டுதல்களின் கீழ் இவைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் சுகாதார வழிகாட்டுதல்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுடன், மத வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.