நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த அரச நிறுவனங்களில், மூன்று நிறுவனங்கள் மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வசம் கொண்டுவரப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியானது.
அதன்படி புத்த சாசன நிதியம், மத்திய கலாசார நிதியம் உட்பட மூன்று நிறுவனங்களே பிரதமர் மஹிந்த ராஜபக்ச வகிக்கும் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படி மூன்று நிதியங்களும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் நிதி அமைச்சின்கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.