18.9 C
Manchester
7 July 2022
Image default
வாழ்க்கை முறை

அசத்தலான சுவையில் இஞ்சு துவையல்- செய்வது எப்படி தெரியுமா?

ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய மசாலாக்களில் இஞ்சி முக்கியமான ஒன்றாக உள்ளது. இவை புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன.

ஏராளமான நன்மைகளை தாராளமாக வழங்கி வரும் இஞ்சியில் எப்படி துவையல் தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்,…

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய்
200 கிராம் இஞ்சி (துண்டாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – 100 கிராம்.
புளி – 50 கிராம்
தாளிக்க
நல்லெண்ணெய் – 250 மில்லி
கடுகு – 1 டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 2 டீ ஸ்பூன்
கருவேப்பிலை உப்பு வெல்லம் – 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு காடாய் எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றவும். பிறகு அதில் துண்டாக நறுக்கி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து பச்சை வசம் போகும் வரை நன்கு வதக்கவும்.

அதன் பிறகு அவற்றோடு, காய்ந்த மிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். இந்த கலவை நன்றாக ஆறிய பிறகு மிக்சியில் பேஸ்ட் போல அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது தாளிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் சூடானதும் இட்டு, முன்பு அரைத்து வைத்துள்ள இஞ்சி கலவையை சேர்க்கவும். இதன் பிறகு நன்றாக கொதிக்க ஆரம்பமாகும் போது அவற்றோடு தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.

அதைத்தொடர்ந்து கொதிக்க விடும் போது துவையல் திக்கான நிறத்திற்கு மாறி கெட்டியாக வரும், அதுவரை கொதிக்க வைக்கவும்.

பிறகு அதில் வெல்லம் சேர்த்து கிளறி கொதிக்க விட்டு கீழே இறக்கவும். நாம் கொதிக்க வைத்து கிளறி இஞ்சி துவையல் நன்றாக சுண்டி வந்தவுடன் அவற்றை ஆற வைத்து ஒரு டாப்பாவில் அடைத்து சுமார் 1 மாதத்திற்கு பயன்படுத்தலாம். அவ்வப்போது சூடு செய்து கொண்டால் சாப்பிடும் கூடுதல் சுவை தரும்.

Related posts

தப்பித்தவறி கூட இந்த உணவுகளை பச்சையாக சாப்பிடாதீங்க! உயிரை பறிக்கும் விஷமாக மாறுமாம்

SudarSeithy

தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் இத்தனை பயன்களா…?

SudarSeithy

கோயில் கோபுரத்தின் நிழல் வீட்டின் மீது விழுந்தால் என்ன நிகழும் தெரியுமா?

SudarSeithy

Leave a Comment