பேத்தியின் திருமணம் நடந்த அடுத்த சில மணிநேரத்திலேயே பாட்டி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரும்பாலும் திருமணமாகப்போகும் தம்பதிகள் அந்த நாளை மறக்கவே மாட்டார்கள். குடும்பத்தினர் வருகையும் வாழ்த்தும் அவர்களை மகிழ்ச்சியடைய செய்யும்.
இதையடுத்து, பேத்திக்கு புற்றுநோய் பாதிப்புடன் போராடும் பாட்டியின் கண்முன்னே திருமணம் நடந்துள்ளது.
அந்த பாட்டி அமெரிக்காவை சேர்ந்த 71 வயதான Avis Russell (அவிஸ் ரஸ்ஸல்) புற்றுநோய் பாதிப்பால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பெற்றும் அவரது உடல் நிலை மோசமாகவே இருந்தது. இதனையடுத்து, தனது பேத்தியின் திருமணத்தை திட்டமிட்டப்படி நடக்க வேண்டும் என மருத்துவமனையிலேயே அவரது திருமணத்தை நடத்தியுள்ளனர்.
ஆனால், துரதிர்ஷடவசமாக திருமணத்திற்கு பின்னர் பாட்டி காலமானார். அவர் சாகும் இறுதி நேரத்தில் பாட்டியுடன் பேத்தி இருந்த அந்த சந்தோஷமான நொடிகளும் திருமண வீடியோவும் இணையத்தில் வெளியாகி உருக வைத்திருக்கிறது.
https://www.facebook.com/watch/?v=847563446158311