பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய AstraZeneca தடுப்பூசிகளை வட கொரியா நிராகரித்ததாக தென் கொரிய உளவு அமைப்புடன் தொடர்பில் உள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டில் தற்போது வரை ஒரு கொரோனா தொற்று கூட பதிவாகவில்லை என்று வட கொரிய கூறிவருகிறது.
ஆனால், தங்கள் நாட்டில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என வட கொரிய தொடர்ந்து கூறிவருவதின் உண்மை தன்மை குறித்து ஆய்வாளர்கள் நீண்டகாலமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தென் கொரியாவின் உளவு நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள சியோலில் இருக்கும் தேசிய பாதுகாப்பு உத்தி (ஐ.என்.எஸ்.எஸ்) நிறுவனம், AstraZeneca தடுப்பூசி நன்கொடைகளை வட கொரிய நிராகரித்ததாகக் கூறியுள்ளது.
கோவக்ஸ் உலகளாவிய தடுப்பூசி விநியோகத் திட்டத்தின் கீழ், பிப்ரவரியில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் astrazeneca தடுப்பூசிகள் வட கொரியாவுக்கு ஒதுக்கப்பட்டது, ஆனால் நீண்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து ஏற்றுமதி தாமதமானதாக ஐ.என்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
சீன தடுப்பூசிகள் பயனுள்ளதாக இல்லை என்ற நம்பிக்கையில் வட கொரியா அதையும் நிராகரித்து விட்டது என்று ஐ.என்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
அதேசமயம் வட கொரிய தலைமை ரஷ்ய தடுப்பூசிகளை நம்புவதாக கூறப்படுகிறது.