7.5 C
Manchester
1 December 2021
Image default
உலகம்

40 கோடி செலவில் மகளின் திருமணத்தை நடத்திய உலகின் பெரும்புள்ளி!

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது மனைவியை விவகாரத்து செய்த நிலையில், அவருடைய மகளுக்கு 40 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸின் மகளான Jennifer Gates எகிப்து நாட்டைச் சேர்ந்த குதிரை பந்தய வீரரான Nayel Nassar என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றநிலையில், இவர்களின் திருமணம் கோலகலமாக அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள North Salem பண்ணையில் இந்த வார இறுதியில் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணம் சுமார் 2 மில்லியன் டொலர்(இலங்கை மதிப்பில் 40,09,03,000 கோடி ரூபாய்) செலவில் நடந்துள்ளது. இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு Jennifer Gates சமீபத்தில் அளித்த பேட்டியில்,

திருமணத்தில் சுமார் 300 விருந்தினர்கள் கலந்து கொண்டதாகவும், திருமணத்திற்கு வரும் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும், கொரோனா எதிர்மறை முடிவை பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாக கூறினார்ர்.

ஏனெனில், இந்த தொற்று நோய் காலக்கட்டத்தில் இது போன்ற நிகழ்வை திட்டமிடுவது மிகவும் சவாலானதாக இருந்ததாக கூறிய அவர், தன்னுடைய பெற்றோரின் விவாகரத்தை குறிப்பிட்டு, எங்கள் குடும்பங்களில் மாற்றங்கள் இருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பை காட்டி வருவதாகவும், நெருக்கமுடனே இருப்பதாகவும் குறிப்பிட்டார். அதோடு திருமணத்திற்கு வரும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தடுப்பூசி கட்டாயம் என்பதை கூறினோம்.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு முகக்கவசம் கொடுத்தோம். அமெரிக்காவை தொற்று நோய் உலுக்கி வருவதால், பாதுகாப்பு என்பது திருமணத்தில் மிக முக்கியமானதாக கருதினோம். இந்த திருமணம் விழா, ஒரு நீண்டகால குடும்ப நண்பரால் ஏற்பாடு செய்யப்பட்டது, இது மிகவும் சிறப்பான மற்றும் நெருக்கமான தருணம் என Jennifer Gates கூறியுள்ளார்.

இந்த திருமணத்தில் பில்கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி Melinda ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு, ரோரி ஜான் என்ற மகனும் ஜெனிபர், போபே அடிலெ என இரண்டு மகள்களும் உள்ளனர். அதில் தற்போது ஜெனிபருக்கு திருமணம் ஆகியுள்ளது.

இதேவேளை பில்கேட்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் மனைவியை விவாகரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery

Kodiyil Oruvan (2021) Tamil HD Movie

Related posts

அவர் ஆண்மையற்றவர்… மனைவியின் கூற்றால் கொதிப்படைந்த இளைஞர் எடுத்த முடிவு

SudarSeithy

பாலின சமத்துவம் கோரி ஜேர்மனியில் மேலாடையின்றி சைக்கிள் பேரணி!

SudarSeithy

இனப்பெருக்க காலத்தில் ஆண் யானையிடம் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்: ஒரு திகில் வீடியோ

SudarSeithy