7.5 C
Manchester
1 December 2021
Image default
உலகம்

உலகின் டாப் 10 கோடீஸ்வரர்; பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணமான பெண்; எச்சரித்த நிறுவனம்!

உலகப்பெரும் புள்ளிகளில் ஒருவரான பில் கேட்ஸை (Bill Gates), பெண் ஊழியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக 2008ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்திருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களுள் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களுள் ஒருவருமான பில் கேட்ஸ் (Bill Gates) உலகளவில் மிகவும் மதிப்புவாய்ந்த மனிதராக திகழ்கிறார்.

இவர் தனது முன்னாள் மனைவி மெலிண்டாவுடனான 27 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் 3ம் தேதி அறிவிப்பு வெளியானது. எனினும் அவருடைய 125 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை குறைந்த வரியில் பிரித்துக் கொள்வதற்காக வெல்த் டாக்ஸை குறைப்பதற்காக பில் கேட்ஸ் (Bill Gates) விவாகரத்து செய்து கொள்கிறார் என பல யூகங்கள் பேசப்பட்டன.

மைக்ரோசாஃப்ட் எனும் டெக் நிறுவன சாம்ராஜ்யத்தின் தலைவராக திகழ்ந்த பில் கேட்ஸ் (Bill Gates) 2008ம் ஆண்டு தலைவர் பதவியில் இருந்து விலகியதுடன் 2020ம் ஆண்டு மார்ச்சில் இயக்குனர் பதவியில் இருந்தும் விலகினார்.

இதனிடையே பெண் ஊழியர் ஒருவருக்கு தகாத வகையில் இ-மெயில் அனுப்பியதற்காக, 2008ம் பில் கேட்ஸை (Bill Gates) , மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கண்டித்ததாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்ரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாஃப்டின் முழு நேர பெண் ஊழியர் ஒருவருக்கு பில் கேட்ஸ் (Bill Gates) தகாத முறையில் மின்னஞ்சல் அனுப்பியது கண்டறியப்பட்டதாகவும், அந்த பெண் ஊழியரை சந்திப்பதற்காக அலுவலகத்துக்கு வெளியே வரச் சொன்னதாகவும் அந்த இ-மெயிலில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அந்த பெண்ணுடன் ஏற்கனவே 20 ஆண்டுகளாக பில் கேட்ஸ் (Bill Gates) உறவு வைத்துக்கொண்டதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது. இ-மெயில் விவகாரம் தெரியவந்ததை அடுத்து மைக்ரோசாஃப்ட் இயக்குனர்கள் குழுவினர் பில் கேட்ஸ் (Bill Gates) இதனை கைவிடுமாறு எச்சரித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பில் கேட்ஸ் (Bill Gates) இதனை ஒப்புக்கொண்டு, இனி இப்படி நடக்காது என மன்னிப்பு கோரியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை இது குறித்து ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த செய்தி உண்மை தான், மேற்கொண்டு தெரிவிக்க வேறேதுவும் கிடையாது என தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை தொழிலில் சக்கரவர்த்தியாக திகழ்ந்த பில் கேட்ஸ் (Bill Gates), கொடையாளராகவும் திகழ்கிறார். மேலும் கேட்ஸ் மெலிண்டா (Gates Melinda) என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். இவ்வாறான நிலையில் பில் கேட்ஸின் (Bill Gates) இமேஜ் சரிவுக்கு குறித்த பெண் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

Kodiyil Oruvan (2021) Tamil HD Movie

Related posts

கனடாவிற்கு குடியேற விரும்புபவரா நீங்கள்? உங்கள் பணி அனுபவம் Express Entry-க்கு தகுதியானதா?

SudarSeithy

பிரித்தானியாவில் தடுப்பூசியை எதிர்க்கக்கூடிய புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

SudarSeithy

காபூலை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு நடுவானில் நடந்த திகில் சம்பவம்! சுவாரசியமான தகவல்

SudarSeithy