பலாங்கொடை – கெப்போக் தோட்டத்தில் குடித்து விட்டு தினமும் தனது பிள்ளைகளை அடித்து துன்புறுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 37 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தாய் வௌிநாட்டில் தொழில்புரிந்து வரும் நிலையில், தந்தையின் பராமரிப்பில் 8 வயதான சிறுவனும் 7 வயதான சிறுமியும் உள்ளனர்.
இவர்களை தினமும் தந்தை துன்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து, அயலவர்களால் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, அவர் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறார்கள் இருவரும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபரை பலாங்கொடை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.