13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

யாழில் அண்ணனின் காதை கடித்த தம்பி; மண்டையை பதம்பார்த்த அண்ணன்

தென்மராட்சி-நாவற்குழிப் பகுதியில் அண்ணன், தம்பி இடையே இடம்பெற்ற மோதலில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

நாவற்குழிப் பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் அண்ணனின் காதை தம்பியார் கடித்து காயப்படுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அண்ணன் அருகில் இருந்த தராசினை தூக்கி தம்பியின் தலையில் தாக்கியுள்ளார்.

தலை மற்றும் காதுப் பகுதியில் படுகாயமடைந்த 32 மற்றும் 37 வயதான சகோதரர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

யாழில் இப்படியும் சில மனிதர்களா! வர்த்தகருக்கு குவியும் வாழ்த்துகள்!

SudarSeithy

மகிந்தவின் நாளைய நல்லூர் ஆலய விஜயத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

SudarSeithy

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை! ஒரே மாதத்தில் இவ்வளவா?

SudarSeithy

Leave a Comment