14.8 C
Manchester
3 July 2022
Image default
இந்தியா

கொரோனா தடுப்பூசி போட வந்த இடத்தில் ஏற்பட்ட காதல்: தாத்தா, பாட்டி செய்த காரியம்

தனிமையில் வசித்த முதியவர்கள் இருவருக்குள் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிந்தது

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் 73 வயதான வர்கீஸ என்பவர் வசித்து வந்தார் .இவரின் பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்தனர் .வர்கீசின் மனைவி இறந்து விட்டதால் அவர் தனியாக வசித்து வந்தார்

கடந்த வாரம் கொரோனா பரிசோதனை முகாமுக்கு வர்கீஸ் சென்றபோது, அங்கு அதே பகுதியை சேர்ந்த 68 வயதான அஸ்வதி என்ற பாட்டியை சந்தித்தார். அஸ்வதிக்கும் திருமணமாகி அவரின் கணவர் சமீபத்தில் இறந்து விட்டார் .அவருக்கிருந்த ஒரே மகளும் திருமணமாகி ,இவரை தனியாக விட்டு விட்டு போய் விட்டார் .இந்நிலையில் இருவரும் அந்த கொரானா மையத்தில் சந்தித்து பேசி ,தங்களின் தனிமையின் கொடுமையில் தவிப்பதை பற்றி கூறினார்கள் .அதனால் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது .பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியவெடுத்தன்ர் .இதை பற்றி தங்கல் பிள்ளைகளிடம் கூறினார்கள்

வெளியூர்களில் வசிக்கும் அவர்களின் பிள்ளைகள் அந்த பெற்றோரின் ஆசைக்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை. வர்கீஸ், அஸ்வதியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து வர்கீஸ்-அஸ்வதி திருமணம் நேற்று முன்தினம் கொச்சியில் எளிமையாக நடந்தது. இருவரின் மகன், மகள் மற்றும் பேரன், பேத்திகள் முன்னிலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

Related posts

சுடுகாட்டில் சடலங்களுக்கு நடந்த திருமணம்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! இறுதியில் நடந்தது என்ன?

SudarSeithy

பல லட்சம் செலவு செய்து நண்பரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! எச்சரிக்கை செய்தி

SudarSeithy

எல்லையில் போராடும் ராணுவ அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

SudarSeithy

Leave a Comment