15.3 C
Manchester
30 June 2022
Image default
இந்தியா

கணவர் இறந்துவிட்டதாக கூறி மருத்துவருடன் மனைவி செய்த மோசமான காரியம்

கணவனை இறந்துட்டார்னு பொய் சொல்லி ஒரு டாக்டருடன் சேர்ந்து இன்சூரன்ஸ் பணத்தை பெற்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

அகமதாபாத்தில் கத்வாடாவில் வசிக்கும் நந்தா மராத்தி என்ற பெண் நிமேஷ் என்பவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

பிறகு அவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்து அவர்களை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். இந்நிலையில் அந்த பெண் நந்தா கணவருக்கு வேலையில்லாததால் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்.

பிறகு அவர் சொந்த கிராமத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் அந்த பெண் நந்தா, சோனி என்ற டாக்டருடன் கூட்டு சேர்ந்து கொண்டு அவரின் கணவர் இறந்து விட்டதாக போலி மருத்துவ சாண்றிதழை பெற்றார்.

பிறகு அந்த சர்ட்டிபிகேட்டை காமித்து அவரின் பெயரில் இருந்த 18 லட்ச ரூபாய்க்கான இன்சூரன்ஸ் தொகையை பெற்றார்.

இதை தெரிந்து கொண்ட நிமேஷ் அங்குள்ள காவல் நிலையத்தில் தான் உயிரோடு இருக்கும்போது தான் இறந்து விட்டதக கூறி தன்னுடைய மனைவி இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக்கொண்டார் என்று புகார் கூறினார்,

போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். அப்போது நிமேஷ் உயிருடன் இருந்து தெருவில் சுற்றி வருவதை கண்டு பிடித்தனர்.

பிறகு நிமேஷின் இறப்புச் சான்றிதழை மோசடி செய்ததாகக் கூறி அவரின் மனைவி நந்தா மற்றும் அவரது கூட்டாளியான ஹரிகிருஷ்ணா சோனி ஆகியோர் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

Related posts

மாப்பிள்ளையை மாற்றிய மணப்பெண்! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்

SudarSeithy

முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டும் பிரபல நாட்டு மக்கள்! ஆய்வில் தெரியவந்த உண்மை

SudarSeithy

கணவரை விட்டுவிட்டு காதலனுடன் எஸ்கேப் ஆக நினைத்த இளம்பெண்: அடுத்தடுத்து நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

SudarSeithy

Leave a Comment