13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

ஆட்சியைக் கவிழ்க்கலாம் என யாரும் கனவு காண வேண்டாம்; பசில்

ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என யாரும் கனவு காண வேண்டாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்றையதினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், தான் அமைச்சராக பதவி ஏற்றவுடனேயே இந்த ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பசில் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்றும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் கட்சியை மனதில் வைத்தே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தெரிவு செய்துள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே அர்த்தமற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் கைவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பசில் ராஜபக்ஷ இதன்போது எதிரணியிடம் கேட்டுக்கொண்டார்.

Related posts

ஜனாதிபதி செயலக வளாகத்தில் பறந்த கறுப்பு, வெள்ளை கொடிகள்

SudarSeithy

ஆரம்பமானது விசாரணை! சிக்குவாரா விமல் வீரவங்ச?

SudarSeithy

பாலத்துக்கு கீழ் மிதந்தது சடலமா? தேடுதல் பணி தீவிரம்! பரபரப்பான ஓட்டமாவடி

SudarSeithy

Leave a Comment