உலகம்

பிரான்ஸ் உள்ளூர் தேர்தல்கள்… தடுமாறும் மேக்ரான் கட்சி: காரணம் என்ன?

உள்ளூர் தேர்தல்களில் இமானுவல் மேக்ரான் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஆளுங்கட்சிக்கு முன், மிகச்சிறிய கட்சியான கிரீன்ஸ் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் கிரீன்ஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், அதேபோல் வரலாற்றில் முதன்முறையாக, இதுவரை மக்களிடையே பெருமளவில் தாக்கம் எதையும் ஏற்படுத்தாத இமானுவல் மேக்ரான் கட்சி மிக மோசமாக தோல்விகளை சந்தித்துள்ளது.

நாட்டில் கிரீன்ஸ் அலை அடிக்கிறது என்று கூறியுள்ள இமானுவல் மேக்ரான், 60 சதவிகித வாக்காளர்கள் வாக்களிக்க வராததே இந்த தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

22 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகின்றன.

தோல்விகளைத் தொடர்ந்து இமானுவல் மேக்ரான் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய இருப்பதாக செய்திகள் உலாவருகின்றன.

ஏற்கனவே, இமானுவல் மேக்ரான் மீது, அவர் பணக்கார்களின் ஜனாதிபதி, அவர் சாதாரண மக்கள் அணுக இயலாத இடத்தில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், ஏற்கனவே நாட்டில் கொரோனாவால் குழப்பமான சூழல் நிலவும் நேரத்தில் எதற்காக வாக்களிக்கச் செல்லவேண்டும் என மக்கள் எண்ணியிருக்கலாம் என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பெயிண்டராக பணிபுரியும் நபருக்கு வந்த வீடியோ அழைப்பில் காத்திருந்த எதிர்பாராத ஆச்சரியம்! என்ன தெரியுமா?

அம்மு

கொரோனாவால் இங்கிலாந்தில் மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகள்

அம்மு

பேரப்பிள்ளைகளின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி சிக்கலில் சிக்கிய பாட்டி: ஒரு எச்சரிக்கை தகவல்

அம்மு