உலகம்

சொல்ல சொல்ல கேட்காமல் பெண்ணிடம் அத்து மீறிய இளைஞன்… அவனது பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு!

இளம்பெண் ஒருவர் மறுத்தும் அவரிடம் அத்து மீறிய ஒரு இளைஞனை அவனது பெற்றோரே காவல் நிலையம் அழைத்துச் சென்ற சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் நடந்துள்ளது.

Jack Evans (18) என்ற இளைஞன் இளம்பெண் ஒருவரிடம் அத்துமீறும்போது, அவர் மறுத்தும் அவரிடம் அத்துமீறியுள்ளான்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பின் அவனது மொபைல் போனில் குறுஞ்செய்தி ஒன்றை பார்த்துள்ளனர் அவனது பெற்றோர்.

அதில், குறிப்பிட்ட பெண்ணிடம் தான் அத்துமீறியதற்காக மன்னிப்புக்கேட்டுக்கொண்டுள்ளதோடு, அந்த பெண் அப்செட்டாக இருப்பதை தன்னால் புரிந்துகொள்ள முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளான் Evans.

அந்த செய்தியைப் பார்த்ததும், அவனது பெற்றோர் அவனை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தாங்களே அழைத்துச் சென்று உண்மையை ஒப்புக்கொள்ளச் செய்துள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி Evansக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணை பொலிசார் தேடிப்பிடித்து விசாரித்தபோது, நடந்தது உண்மைதான் என்று கூறியுள்ள அந்த பெண், தன் வாழ்வே சூனியமாகிப்போனது போல் உணர்வதாகவும், ஆண்கள் மீதான நம்பிக்கை போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் புகாரளிக்காத நிலையிலும், சம்பந்தப்பட்ட இளைஞனின் பெற்றோரே தங்கள் மகனை பொலிசாரிடம் பிடித்துக்கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கனடாவில் நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவன்: பொலிசார் அளித்துள்ள இதயத்தை நொறுக்கும் செய்தி!

அம்மு

11 நாட்டு மக்கள் உள்ளே நுழைய அதிரடியாக தடை விதித்த நாடு! வெளியான முக்கிய அறிவிப்பு

அம்மு

கனடிய லொட்டரி வரலாற்றில் முதல் முறை! பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ள பெண்… மொத்தம் எவ்வளவு தெரியுமா?

அம்மு