ஆன்மீகம்

சகல சௌபாக்கியத்தை அளிக்கும் அஷ்ட திக் சக்திகளின் வழிபாடு…!!

ஒவ்வொரு திக்குகளை ஆளும் சக்திகள்: 1. கிழக்கு – ப்ரஹ்மணி (பிராம்மி), 2. தென்கிழக்கு – கௌமாரி, 3. தெற்கு – வராஹி, 4. தென்மேற்கு – சியாமளா, 5. மேற்கு – வைஷ்ணவி, 6. வடமேற்கு – இந்திராணி, 7. வடக்கு – சாமுண்டி, 8. வடகிழக்கு – மகேஸ்வரி.

பிராம்மி:

பிரம்ம தேவரின் அம்சமும் சக்தி வடிவமே பிராம்மி என்று அழைக்கப்படுகிறாள். கிழக்கு திசையின் சக்தி வடிவம். பிராமி சக்தியை வணங்குவதால் குழந்தைப் பேறும், கலை ஞானமும் உண்டாகும்.

கௌமாரி:

சரவணனின் அம்சமாக அவதரித்தவள் கௌமாரி என்று அழைக்கப்படுகிறாள். தென் கிழக்கு திசையின் சக்தி வடிவம். கௌமாரி தேவியை வழிபடுவதால் பதவி உயர்வும் மனதில் இருக்கும் பயமும் அகலும்.

வராஹி:

விஷ்ணுவின் அவதாரமான வராக மூர்த்தியின் அம்சமாக இருப்பவர் வராஹி. தெற்கு திசையின் சக்தி வடிவம். வராஹி தேவியை வணங்கி வருவதால் எதிரிகளை அழித்து வெற்றி கொள்ளலாம். மனதில் தைரியம் பிறக்கும்.

சியாமளா:

மீனாட்சி அம்மனின் அவதாரமாக திகழ்பவள் சியாமளா தேவி. தென் மேற்கு திசையின் சக்தி வடிவம். சியாமளா தேவியை வழிபடுவதால் சகல கலைகளிலும் தேர்ச்சி மற்றும் அறிவுக்கூர்மை உண்டாகும்.

வைஷ்ணவி:

விஷ்ணுவின் அம்சமாக தோன்றியவர். நாராயணி என்றும் அழைக்கப்படுபவள். மேற்கு திசையின் சக்தி வடிவம். வைஷ்ணவியை வழிபடுவதால் உடல் ஆரோக்கியமும் எண்ணங்களில் மேன்மையும் உண்டாகும்.

மஹேந்திரீ (இந்திராணி):

தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் அம்சமாக தோன்றியவர் இந்திராணி. வடமேற்கு திசையின் சக்தி வடிவம். இந்திராணியை வழிபடுவதால் நல்ல வாழ்க்கைத் துணை அமைத்து தருவார். பணத்தட்டுபாடு குறையும்.

சாமுண்டி:

ருத்தரனின் அம்சமாக தோன்றியவர். எந்த விதமான சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதவர். வடக்கு திசையின் சக்தி வடிவம். சாமுண்டியை வணங்கி வருவதால் எடுத்த செயலில் எவ்விதமான இன்னலும் இன்றி வெற்றியும், பாதுகாப்பும் உண்டாகும்.

மகேஸ்வரி:

சிவபெருமானின் அம்சமாக திகழக்கூடியவர் மகேஸ்வரி. வடகிழக்கு திசையின் சக்தி வடிவம். மகேஸ்வரியை வழிபடுவதால் மனதில் இருந்து வந்த ஐயங்கள் மற்றும் கோபம் நீங்கும். சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடியவர்.

இவ்விதம் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் அஷ்ட திக் சக்திகளை வாழ்நாளில் அனுதினமும் வழிபட்டு வாழ்க்கையில் உள்ள எல்லா வளமும், சிறப்பும் பெறுவோம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Astrology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Astrology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மங்களம் அளிக்கும் குடும்ப பழக்கங்கள்

அம்மு

கஷ்டங்களை தீர்க்கும் 12 ராசிகளுக்கான வெற்றிலை பரிகாரங்கள்..!!

அம்மு

தங்க நகை எந்த நாட்களில் வாங்கினால் செல்வம் கொழிக்கும்ன்னு தெரியுமா?

அம்மு