தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த சுற்றறிக்கையில்,
திருமண வைபவங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருமண மண்டபங்களில் 25 சதவீதம் அல்லது 150க்கும் குறைந்த அளவில் நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் விகாரைகள் போன்ற மதஸ்த்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகாத மரணங்களின் இறுதிக் கிரியைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.