கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கட்டுமான தளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தின் சாரதி ஒருவ பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர் கடுவெலவில் வசிக்கும் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.