நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது பிரதான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 20 பேர் ஓரங்கட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் குறித்த அமைச்சர்கள் யார் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய சந்தர்ப்பத்தை கைநழுவவிட்டு மக்கள் மத்தியில் எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொண்ட அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு நீக்கப்படவிருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் அவர்களுக்குப் பதிலாக புதுமுகங்களை களமிறக்க நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ யோசனை முன்மொழிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.