பிரித்தானியாவில் ஹொட்டல் தனிமைப்படுத்தலை தவிர்க்க தம்பதி ஒன்று 7 நாடுகளில் பயணம் செய்து, 6,000 பவுண்டுகள் செலவிட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாபிரிக்கா சென்றிருந்த பிரித்தானியா தம்பதி ஒன்று, ஹொட்டல் தனிமைப்படுத்தலை தவிர்க்கும் பொருட்டு 7 நாடுகளில் பயணம் செய்து நாடு திரும்பியுள்ளனர்.
ஆனால், இந்த பயணங்களின் இடையே அவர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. Ivan மற்றும் Jayne Hutchings தம்பதிகளே கட்டாய ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு பயந்து, 7 நாடுகள் சென்று பின்னர் பிரித்தானியா திரும்பியுள்ளனர்.
அம்பர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள Frankfurt வழியாக பிரித்தானியா திரும்பியுள்ள நிலையில், அவர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள 56 வயதான Ivan, தங்களின் மூதாதையர்கள் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் எனவும், கொரோனா பெயரில் அமுலுக்கு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் காட்டுமிராண்டித்தனம் எனவும் சாடியுள்ளார்.
தடுப்பூசி அளிக்கும் திட்டமானது சிறப்பாக முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட Ivan, ஆனால் ஹொட்டல் தனிமைப்படுத்தல் உண்மையில் வெறுக்கத்தக்கது என்றார்.
தென்னாபிரிக்காவுக்கு சென்றிருந்த Ivan தம்பதி, கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் திகதி பிரித்தானியா புறப்பட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால் டிசம்பரில் பிரித்தானியாவுக்கான விமான சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.
நேரடி விமானங்கள் இல்லாத நிலையில், அவர்கள் தென்னாப்ரிக்காவில் தங்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து எகிப்து, துருக்கி வழியாக ஒருகட்டத்தில் குரோஷியா சென்றடைந்தனர்.
அங்கிருந்து Frankfurt சென்றவர்கள், அதன் பின்னர் பர்மிங்காம் திரும்பியுள்ளனர். இதனிடையே டாக்ஸியில் குரோஷியா செல்லும் முன்னர் Montenegro பகுதியில் தங்கியிருந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
லேசான அறிகுறிகள் என்பதால், குடியிருப்பிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இருவரும் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.