பிரபல நாடக நடிகரான ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமான தகவல் திரையுலகினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பல டிவி தொடர்களில் நடித்துள்ளவர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன். இவர் சுமார் 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சுமார் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் உடல் நலக்குறைவால், நேற்று மாலை காலமானார்.
அவரது மறைவுக்கு மேடை நாடக கலைஞர்கள், சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.