இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த XPress Pearl கப்பலில் இருந்து இன்றும் கழிவுப்பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.
குறித்த கழிவுகள் இன்று காலை இரத்மலானை, மொரட்டுவ மற்றும், அங்குலான கடற்கரையில் கரையொதுங்கியிருக்கின்றன.
தற்போது நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய காலநிலையால் இந்த கழிவுகள் மீண்டும் கரையொதுங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கரையொதுங்கியுள்ள இந்த ஆறு பிளாஸ்டிக் பைகளும் அங்குலான பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு கடலோர பாதுகாப்பு துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.