15.3 C
Manchester
30 June 2022
Image default
சினிமா

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொகுப்பாளினி அர்ச்சனா – கடும் ஷாக்கில் ரசிகர்கள்!

பிரபல ரிவி தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் இன்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 இல் கலந்து கொண்டு வைல்ட் கார்டு போட்டியாளராக மீண்டும் உள்ளே வந்து அனைவரின் கவனதையுமே ஈர்த்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா.

இதனையடுத்து, தற்போது திடீரென இவருக்கு மூளை அருகே ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் அதுவும் கூடிய விரைவில் நடக்க இருக்கிறது என கூறி இவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் கூறியதாவது, ”எப்போதும் இதயத்திலிருந்து இயங்கும் ஒரு பெண் நான். அதனால் என் மூளை கோபமடைந்து என் இதயத்தை விட அது வலிமையானது என்று எனக்குக் காட்ட விரும்பியுள்ளது.

தற்போது அது ஒரு சிறிய பிரச்சினையைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. அது என் மண்டை ஓட்டை லேசாகக் குத்திவிட்டது. அதில் இருக்கும் ஒரு சிறு துளையை நான் அடைக்க வேண்டியுள்ளது.

மேலும், இன்று எனக்கு செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவுக்கான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. மண்டை ஓட்டில் மூளைக்கு அருகில் சில விநோத வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அதன் பிறகு ஒரு வாரம் கழித்து வீடு திரும்புவேன்.

இந்தக் கட்டத்தையும் எதிர்த்துப் போராடி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாவும் வீடு திரும்புவேன்” என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CRIQf3qF1t1/?utm_source=ig_web_copy_link

link

Related posts

நடிகை சமந்தாவின் கணவரின் சொத்து மதிப்பு இவ்வளவா? மனைவிக்கு டஃப் கொடுப்பாரோ

SudarSeithy

நாக சைதன்யா மீண்டும் திருமணம்.. சமந்தா கடும் கோபத்தில் போட்டிருக்கும் ட்விட்

SudarSeithy

தோழியுடன் படுக்கையறையில் பிரபல நடிகை ஆலியா! லீக்கான புகைப்படம்..

SudarSeithy

Leave a Comment