15.3 C
Manchester
30 June 2022
Image default
உலகம்

உலகசந்தையில் எரிபொருளுக்கான விலை அதிகரிப்பு!

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் இளவரசர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் கச்சா எண்ணெய் விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

பெற்றோலிய உற்பத்தி அளவு மற்றும் அதன் விலையை மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஒபேக் கூட்டமைப்பு நாடுகள் தீர்மானிக்கின்றன.

கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியில் இருந்த தேக்கத்துக்கு முடிவு கட்டி உற்பத்தியை அதிகரிக்க உறுப்பு நாடுகள் விருப்பம் தெரிவித்தன.

ஆனால் மசகு எண்ணெய் உற்பத்தி அளவை 8 மாதங்களுக்குப் பிறகு அதிகரிக்கலாம் என்று சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா யோசனை தெரிவித்தன.

இதனை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்றுக்கொள்ளவில்லை. மசகு எண்ணெய் உற்பத்திக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்துள்ள முதலீடுகளே இதற்குக் காரணமாகும்.

இப்பிரச்சினையால் கடந்த வாரம் நடைபெறவிருந்த ஒபெக் நாடுகள் கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அபுதாபி இளவரசர் முகமது பின் சயித் இடையே தொழில், தூதரக உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

சவூதி அரேபியா தமது நாட்டில் தொழில் தொடங்குமாறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் போட்டி உருவாகி துபாய், அபுதாபியின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கருதுகிறது.

மேலும் இஸ்ரேல் உடன் ஐக்கிய அரபு அமீரகம் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டதும் சவூதி அரேபியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற மோதல் போக்கும் மசகு எண்ணெய் உற்பத்தி தேக்கமடையக் காரணமாக கருதப்படுகிறது.

Related posts

பிரித்தானியாவிற்கு வந்த ஆப்கான் அகதிகள் நிலை என்ன? வெளி வரும் முக்கிய தகவல்

SudarSeithy

கனடாவுக்கு புலம்பெயர்ந்த இளம்தம்பதி கைக்கு வந்த பல கோடி பணம்! சொந்த நாட்டுக்கு செல்லப்போகும் மகிழ்ச்சி

SudarSeithy

காய்ச்சலுக்கான ஊசிக்கு பதிலாக சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: குமுறும் பெற்றோர்

SudarSeithy

Leave a Comment