வாழ்க்கைமுறை

வயிற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்களை மொய்க்க விட்ட கர்ப்பிணி பெண்! வெளியான புகைப்படம்

கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விலைமதிப்பற்ற தருணங்களில் ஒன்றாகும். இதன் காரணமாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் ஒவ்வொரு நிமிடங்களையும், தங்களுடைய குழந்தைக்காக அப்போதில் இருந்தே செலவிட ஆரம்பித்துவிடுவார்கள்.

அவர்கள் மீது அந்தளவிற்கு அக்கறை காட்ட ஆரம்பித்துவிடுவர். இது மிகவும் விலைமதிப்பில்லாதது என்பதால், இது எப்போதும் நினைவாக இருக்க வேண்டும் என்பதற்காக வளைகாப்பு போன்ற வீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இருப்பினும், தற்போது இருக்கும் காலத்தில் கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு மாதங்களிலும், பல்வேறு விதமாக புகைப்படங்கள் எடுத்து, அதை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.

வீட்டிற்கு உள்ளே புகைப்படங்கள் எடுப்பதை விட, வெளியில் இயற்கை அழகு கொஞ்சும் இடங்களில் சற்று வித்தியாசமாக புகைப்படங்கள் எடுக்கப்படுகிறது.

ஆனால், வெளிநாடுகளில் இதற்கு என்று ஒரு போட்டோ ஷுட் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கு உதாரணம் தான் Bethany Karulak-Baker.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த தேனீக்களை வைத்து வியபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் maternity photoshoot-காக புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது, அவர் தன்னுடைய கர்ப்ப வயிற்றில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்களை மொய்க்கச் செய்து புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளதால், அதை பார்க்கும் போது ஒரு நிமிடம் நம்மையே அதிர்ச்சியடைய வைக்கிறது.

ஆனால், அவர் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், சுமார் 10,000 தேனீக்களை என் மீது வீசினோம். அது இயற்கையாகவே ஒரு தாடி போன்று மொய்த்துவிட்டன. யாரும் கவலைப்பட வேண்டாம். இது மருத்துவரின் அனுமதி பெற்றே பிறகே எடுக்கப்பட்டது.

இது மிகவும் ஆபத்தானது. தயவுசெய்து அனுபவமும் அறிவும் இல்லாமல் இதை முயற்சி செய்ய வேண்டாம். Bethany Karulak-Baker பொறுத்தவரை எளிதாக கர்ப்பமடையவில்லை. ஏனெனில் அவர் ஏற்கனவே ஒரு கருச்சிதைவை எதிர் கொண்டுள்ளார்.

அதன் பிறகு அவர் நொறுங்கி போன நிலையில் காணப்பட்ட இவர், தறோது 37 வார கர்ப்பிணி பெண்ணாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

குதிகால் வெடிப்பை நிரந்தரமாக போக்க இதை செய்க!

அம்மு

திடீரென எரிச்சல், கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள்

அம்மு

சேப்பங்கிழங்கு சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா?

அம்மு