செய்தி

கொரோனா தொற்று; முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 4 மாதங்கள்

கொவிட்-19 தொற்றுறுதியான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 4 மாதங்கள் ஆகியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி சுற்றுலா வழிகாட்டியான இலங்கையர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இந்த நிலையில், நாட்டில் நேற்றைய தினம் 300 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட தினமாக நேற்றைய தினம் பதிவானது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்றைய தினம் 283 பேருக்கு கொவிட்-19 தொற்றுயதியானது.

இதேநேரம், நேற்று முன்தினம் 56 பேருக்கு தொற்றுறுதியாகியிருந்தது.

இதற்கமைய, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இதுவரையில் 339 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய 9 பேருக்கும், பாகிஸ்தானிலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பிய 3 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறதியானது.

அத்துடன், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பிலிருந்த மேலும் 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் தொற்றுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்து 980 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

Related posts

முகக் கவசம் அணிவது தொடர்பில் வெளியான புதிய தகவல்!

அம்மு

சுவிட்சர்லாந்தில் பொது போக்குவரத்து முற்றிலும் இலவசம்: ஒரே ஒரு நிபந்தனை

அம்மு

வீட்டில் இயங்கிய துப்பாக்கி தொழிற்சாலை! சந்தேக நபர் கைது

அம்மு