வாழ்க்கைமுறை

வெறும் வயிற்றில் இந்த 5 பானங்களில் ஏதாவது ஒன்றினை குடியுங்கள்! உங்கள் தொப்பை காணாமல் போய்விடும்

பொதுவாக வயிற்று தொப்பையை கரைக்க நாம் உடற்பயிற்சி செய்வோம். ஆனால் உடற்பயிற்சி இல்லாமல் ஆரோக்கியமான பானங்கள் மூலம் தொப்பை குறைவதற்கு மாங்கு மாங்குனு உடற்பயிற்சி செய்வதெல்லாம் போய் இப்பொழுது ஆரோக்கியமான பானங்களை குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் ஆரோக்கிய பானங்கள் நம் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தொப்பையை குறைக்க பயன்படுகிறது. உடல் எடையை குறைப்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.

அதற்காக நீங்கள் நிறைய உடற்பயிற்சியையும் அர்ப்பணிப்பையும் கொடுக்க வேண்டும். ஆனால் வயிற்று கொழுப்பை எளிதாக கரைக்க வேண்டும் என்றால் அதற்கு ஆரோக்கியமான பானங்கள் தேவைப்படுகின்றன.

இந்த பானங்களில் உள்ள மருத்துவ குணங்கள் உங்கள் தொப்பையை வெகுவாக குறைப்பதை காண முடியும்.

சீரக தண்ணீர்

சீரகம் உண்மையிலேயே ஒரு அதிசய மசாலா பொருள் ஆகும். அதனால் தான் நம் இந்திய சமையல்களில் சீரகம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சீரக தண்ணீர் நம் உடலின் வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் அதிகரிக்கிறது. மேலும் விரைவாக உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. எனவே உங்க வயிற்று கொழுப்பை கரைக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் சீரகம் கலந்த தண்ணீரை குடியுங்கள். ஏனெனில் இது குறைந்த கலோரி கொண்ட பானமாகும். இது உங்க பசியை போக்குகிறது. இதனால் அதிகப்படியான உணவு உட்கொள்ளுதலை தடுக்க முடியும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து இரவில் ஊற விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை வடிகட்டி குடியுங்கள். கண்டிப்பாக உங்க தொப்பையின் அளவில் மாற்றம் தெரிய வாய்ப்பு உள்ளது.

​பெருஞ்சீரக தண்ணீர்

பெருஞ்சீரகம் பழங்காலத்தில் இருந்து இன்று வரை உணவிற்கு பிறகு வாயில் போட்டு மெல்லக் கூடியதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பெருஞ்சீரகம் பல பாரம்பரிய வைத்தியங்களிலும் பயன்படுகிறது. இது எடை இழப்புக்கு உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் போட்டு இரவில் ஊற வைத்து விடுங்கள். காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்.

​ஓம வாட்டர்

ஓம வாட்டரை அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை சீரண சக்தியை மேம்படுத்த பயன்படுத்தி வந்தனர். இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. உணவை உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது. இதனால் கொழுப்பு உடலில் தேங்குவது கடினம். இரண்டு தேக்கரண்டி உலர்ந்த ஓம விதைகளை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வாருங்கள்.

லெமன் தேன் வாட்டர்

லெமனிலில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் தேன் நிரம்பி காணப்படுகிறது. இந்த பானம் வளர்சிதை மாற்றத்தையும் செரிமானத்தையும் அதிகரிக்கிறது. எனவே காலையில் வெறும் வயிற்றில் லெமன் சாற்றை பிழிந்து அதில் ஒரு டீ ஸ்பூன் தேன் சேர்த்து குடித்து வாருங்கள். அது உங்க வயிற்று கொழுப்பை எரிக்க உதவும். இது உங்களை உற்சாகப்படுத்தும் மற்றும் புத்துணர்ச்சி ஊட்டும். எனவே இது உங்களுக்கு ஒரு சரியான எடை இழப்பு பானம் ஆகும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த ஆரோக்கிய பானமாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதிகாலையில் ஒரு கப் க்ரீன் டீ உங்க எடையை இழக்க உதவும். இது உங்களுடைய பசியை அடக்கி அதிகப்படியான உணவு எடுத்துக் கொள்வதை தடுக்கும். சர்க்கரை இல்லாமல் குடிப்பது மிகவும் நல்லது. க்ரீன் டீ 2 கப் குடித்தால் போதுமானது. இதை விட அதிகமாக குடிக்கும் போது உங்க எலும்புகளில் இருந்து கால்சியம் இழப்பு ஏற்படக் கூடும் என்பதை மறக்க வேண்டாம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

Related posts

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!!

அம்மு

இந்த உணவுகளை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்…!

அம்மு

உடலில் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் பற்றி தெரியுமா?

அம்மு