விளையாட்டு

டோனியை அன்று மூன்றாவது வீரராக இறக்கியது ஏன்? வாய்ப்பு கொடுத்ததற்கான காரணம்! கங்குலி விளக்கம்

டோனிக்கு வாய்ப்பு கொடுத்தது பற்றி, இந்திய அணியின் முன்னாள் தலைவரான கங்குலி விளக்கமளித்துள்ளார்.

இந்திய அணி ஒரு சரியான பினிஷர் இல்லாமல் திணறிக் கொண்டிருந்த போது, இதோ நான் இருக்கிறேன் என்பது போல் தன்னுடைய அற்புதமான ஆட்டத்தின் மூலம், சிறந்த பினிஷராக மட்டுமின்றி, அணிக்கு சிறந்த தலைவராகவும் டோனி உருவெடுத்தார்.

இப்போது நாம் டோனியை இப்படி கொண்டாடுகிறோம் என்றால், அதற்கு முக்கிய காரணம் கங்குலி தான், ஏனெனில் முதல் போட்டியில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் டோனி நடையை கட்டினார்.

இதனால் அடுத்து இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற போது, பாகிஸ்தான் தொடரில் மூன்றாவது வீரராக களமிறக்கி வாய்ப்பு கொடுத்தார் கங்குலி, அந்த போட்டியில் டோனி 148 ஓட்டங்கள் குவித்தார்.

அதன் பின் டோனி தொட்டது எல்லாம் வெற்றி என்பது போல் தான் அமைந்தது.

இந்நிலையில், டோனியை அறிமுகம் செய்தது குறித்து பிசிசிஐ நேரலையில் மயங்க் அகர்வால் கங்குலியிடம் கேட்ட போது, சிறந்த வீரர்களை தெரிவு செய்வது என்பது எனது கடமை.

ஒரு தலைவனாக நான் அனைத்து விதத்திலும் யோசித்து செயல்பட வேண்டும். சில நேரங்களில் உள்ளுணர்வு தோன்றும்.

அந்த உள்ளுணர்வை கேட்டால் நிச்சயம் நல்ல பலனே கிடைக்கும். அதன்படி டோனி விஷயத்திலும் எனக்கு அவ்வாறு தான் தோன்றியது தோனி ஒரு மிகச்சிறந்த வீரராக இந்திய அணிக்கு இருப்பார் என்று நான் உறுதியாக நம்பினேன்.

அவருக்கு நான் வாய்ப்பளித்தது மிகவும் பெருமை அடைகிறேன். இந்த அளவிற்கு டோனி இன்று உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் நல்ல பினிசர் மட்டுமல்ல ஒரு சிறந்த வீரரும் கூட ஏனெனில் நான் தலைவராக இருந்தபோது அவரை மூன்றாவது இடத்தில் இறக்கி விட்டு பல போட்டிகளில் சிறப்பாக விளையாட வைத்திருக்கிறேன் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Sport News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Sport News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சீனா! வெளியான முக்கிய அறிவிப்பு

அம்மு

டோனியின் பேச்சை கேட்காமல் விளையாடினேன்! 7 ஆண்டுகளுக்கு பின் இரட்டை சதம் ரகசியத்தை கூறிய ரோகித்

அம்மு

வேண்டுமென்றே ரன் அவுட்டில் மாட்டி விடும் அவுஸ்திரேலிய வீரர்! பல வருடங்கள் கழித்து பேசிய ஷேன் வார்னே

அம்மு