4.1 C
Manchester
26 January 2022
Image default
இலங்கை

இலுப்புகன்னிய பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி

மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலுப்புகன்னிய பகுதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக மிஹிந்தலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த பெண் அவரது வீட்டிற்கு அருகே உள்ள காணியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மேலும் அவருக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதால் அவர் தலையில் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்தது.

எனவே இந்த மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். உயிரிழந்தவர் இல்லுகன்னியா வடக்கு பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 61 வயது நபர்!

SudarSeithy

முல்லைத்தீவு யுவதி ஒருவரைக் காணவில்லை; தாயார் முறைப்பாடு

SudarSeithy

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய இராணுவ பயிற்சி

SudarSeithy