உலகம்

மரணதண்டனையின் விளிம்பில் 3 இளைஞர்கள்… பற்றி எரியும் ஈரான்! காப்பாற்ற போராடி வரும் மக்கள்

ஈரானில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால், இதற்கு எதிராக மக்கள் போராட துவங்கியுள்ளனர்.

ஈரான் நாட்டில் பொருளாதாரத் தேக்க நிலை நீடித்துவருகிறது. ஈரானின் பண மதிப்பு குறைந்து, பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பலமடங்கு அதிகமாகியுள்ளது.

இந்த பொருளாதார பிரச்னையை சரி செய்ய ஈரான் அரசு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலையை ஐம்பது சதவிகிதம் வரை உயர்த்தியது.

இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குறித்த போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து சென்ற அமிர் ஹூசைன் மொராடி, சயீத் டாம்ஜிடி மற்றும் மொஹம்மத் ராஜாபி ஆகிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது தேசதிற்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வந்த ஈரான் உச்ச நீதிமன்றம் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை உறுதிப்படுத்தி மரணதண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூன்று பேருக்கும் ஆதரவாக ஈரானில் மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.

மூன்று பேரையும் விடுவிக்கக்கோரி பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் #StopExecutionsinIran, #Don’t_Execute என்று பல்வேறு ஹேஸ்டேக் களை டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

எதிர்காலத்தில் ஈரான் அரசுக்கு எதிராக யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று கருதுகிறது. போராட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்திலேயே அப்பாவி இளைஞர்கள் மூவருக்கும் மரணதண்டனை விதித்துள்ளது என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டித்துள்ளனர்.

ஈரான் அரசுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், பொதுமக்களும் நேரடியாக மூன்று பேரின் மரண தண்டனைக்கு எதிராகப் போராடத் தொடங்கியுள்ளது, ஈரான் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

டேட்டிங் சென்றபோது பெண்ணை முத்தமிட்ட பிரித்தானியருக்கு நேர்ந்துள்ள சோகம்!

அம்மு

உலகம் ‘தலைமுறை பேரழிவை’ எதிர்கொள்ளும்! ஐ.நா எச்சரிக்கை

அம்மு

புதிய கொரோனா மையங்களாகிப்போன பிரெஞ்சு நகரங்கள்: கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்

அம்மு