ஆன்மீகம்

பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்

பூஜை அறை நம் வீட்டின் ஒரு முக்கிய இடம்.பூஜை அறையில் நாம் பலவிதமான படங்களை வைத்திருப்போம்.படங்களை தவிர்த்து பூஜை அறையில் மிக முக்கியமாக நம் கவனத்தில் இருக்கவேண்டிய 5 பொருட்கள் என்ன என்பதை இன்றைய தகவலில் பார்க்க இருக்கிறோம்.

  • அனைவரது பூஜை அறையிலும் முழுமுதற் கடவுளான விநாயகர் படம் இருக்கும்.அதிலும் வெள்ளெருக்கு விநாயகர் இருக்க வேண்டியது அவசியம்.வெள்ளெருக்கு விநாயகர் நம் வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பட்சத்தில் தீய சக்திகள் அண்டாது.இந்த விநாயகரை தினமும் பூஜித்து வணங்கும்போது குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.
  • லக்ஷ்மி தேவி வாசம் செய்யக்கூடிய வலம்புரிச்சங்கு.ஒரு வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் மிகமிக முக்கியம்.ஒற்றைப்படையில் உங்கள் வசதிக்கேற்ப வலபுரிச்சங்கை வாங்கி பூஜை அறையில் வைத்துக்கொள்ளலாம்.பட்டுத்துணியை விரித்து அதில் அரிசியை பரப்பி அதன்மேல் வலம்புரிச்சங்கை வைக்கவேண்டுமே தவிர தரையில் வைக்கக்கூடாது.
  • பெண்களுக்கு மிக முக்கியமான ஒன்று குங்குமச்சிமிழ்.நம் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் தரவேண்டியது அவசியம்.குங்குமச்சிமிழில் குங்குமம் எப்பொழுதும் நிறைந்திருக்கவேண்டும்.
  • குங்குமச்சிமிழ் பக்கத்தில் சந்தன கும்பாவில் சந்தனம் நிறைத்து வைக்கவேண்டும்.
  • குலதெய்வம் தெரியாதவர்கள் அல்லது குலதெய்வ திருவுருவப்படம் இல்லாதவர்கள் கண்ணாடியை பூஜை அறையில் வைக்கவேண்டும்.

இந்த 5 பொருட்களும் நமக்கு மங்களத்தன்மை தரக்கூடியது.இறையருளைத்தந்து லட்சுமி கடாட்சத்தை தரக்கூடியது.மாங்கல்ய பலத்தை தரக்கூடியது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Astrology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Astrology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மன அமைதிக்கு நேர்மறை ஆற்றல் அவசியம்

அம்மு

சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?

அம்மு

எலுமிச்சை பழத்தை வைத்து தீய சக்திகளின் ஆதிக்கம் இருப்பதை எவ்வாறு கண்டிபிடிக்கலாம்…?

அம்மு