14.8 C
Manchester
3 July 2022
Image default
இந்தியா

வீட்டு சமையலறையில் ஏதோ ஒன்று சுருண்டு கிடப்பதை கண்ட நபர்! அருகில் சென்ற போது காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் வீட்டு சமையலறையில் பெரிய சாரைப்பாம்பு இருப்பதை கண்ட நபர் அதிர்ச்சியடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அம்மையப்பட்டு கிராமத்தில் உள்ள கோழிக்கடையில் வேலை பார்த்து வருபவர் குலாப்ஜான்.

இவர் தனது வீட்டின் சமையலறைக்கு சென்ற போது ஏதோ ஒன்று சுருண்டு கிடப்பதை பார்த்தார். அருகே சென்ற போது பாம்பு தான் சுருண்டு படுத்திருந்து என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் குப்புராஜ் தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்தனர்.

பின்னர் கோணிப்பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்று அருகில் உள்ள காப்புக் காட்டில் விட்டனர். இது தொடர்பான புகைப்படம் வைரலாகியுள்ளது.

Related posts

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகள் எவை?

SudarSeithy

தமிழகத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பிஞ்சு குழந்தையை பார்க்கச் சென்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

SudarSeithy

குரங்குதானே என விட்டுச்செல்லாமல் நபர் செய்த செயல்! வைரலாகும் காணொளி

SudarSeithy