பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட அமைச்சு பதவிகள் கைமாறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன், அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் வகிக்கும் அமைச்சுகளின்கீழுள்ள விடயதானங்களும் மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அரச உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வாரஇதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் பொருளாதார இலக்குகளை விரைவில் அடைவதை இலக்காகக்கொண்டே அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த அமைச்சரவை மறுசீரமைப்பின்போது சுதந்திரக்கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் அக்கட்சிக்கு மேலும் மூன்று அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
மேலும் சுகாதாரம், கல்வி, தொழில் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுகளி துடிப்புடன் செயற்படக்கூடிய இளம் அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.