யாழ்.பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்த 3 மாணவர்களுக்குக் கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், விடுதியிலுள்ள யாழ்.மாவட்ட மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.பல்கலைகழக கோண்டாவில் விடுதியில் 200 வரையிலான மாணவர்கள் தங்கியிருந்த நிலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதோடு மேலும் சிலருக்கு மீள் தொற்றுப் பரிசோதனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்ட மாணவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்கள் மட்டும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அதேவேளை இந்த விடுதியில் இருந்த யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்தும் விடுதியிலேயே தங்கியுள்ளனர். இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களினால் கொரோனா பரவல் ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.