கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்போக்கணை பகுதியில் கட்டப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற இவ்வெடி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதபிள்ளை கிருஷ்ணகுமார் எனும் 35 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த அவர், தர்மபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.