மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகவும், புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்காகவும் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என பிரான்ஸ் நாட்டவர்கள் பலர் முடிவு செய்துள்ளார்கள்.
உலகின் மக்கள்தொகை 7.8 பில்லியனைத் தாண்டிவிட்ட நிலையில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகவும், புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்காகவும் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என பிரான்ஸ் நாட்டவர்கள் பலர் முடிவு செய்துள்ளார்கள்.
நான் ஏன் இன்னொரு வாடிக்கையாளரை இந்த உலகத்துக்கு கொடுக்கவேண்டும் என்று கேட்கும் Manon (26), உலகத்தின் வளங்களை ஏற்கனவே அதிகம் நாம் பயன்படுத்தியாயிற்று என்கிறார். Manonஐ போல, பிரான்ஸ் நாட்டவர்கள் பலர் இதே மன நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.
புவிக்கு உதவும் வகையில், சுற்றுச்சூழல் காரணங்களுக்காக குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
ஒன்லைனில் தங்களை ‘childfree’ அல்லது ’green inclinations, no kids’ என்பதன் சுருக்கமாக ’ginks’ என இந்த கூட்டத்தினர் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். பிரான்சில், ஒவ்வொரு குழந்தையும், ஆண்டொன்றிற்கு 40 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதாகவும், கார்பன் டை ஆக்சைடு வெளியேறினால் புவி வெப்ப மயமாகும் என்றும் கூறும் இவர்கள், ஆகவேதான் குழந்தையே பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்கிறார்கள்.
அதே நேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ளாத பெரியவர்களை நான் அறிந்ததில்லை, எனக்கும் குழந்தைகளில்லாத ஒரு வாழ்க்கை விருப்பமில்லை.
ஆனால், நாம் அந்த குழந்தைகளுக்காக எப்படிப்பட்ட உலகத்தை விட்டுச் செல்கிறோம் என்று நம்மை நாமே கேட்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு உலகத்தை பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை என்கிறார் Clemence (27).