வேலைவாய்ப்பு

ஆபீசுல இப்படி எல்லாம் பேசுனிங்க அவ்வளவு தான்!

நாம் வேலை செய்யும் இடத்தில் அனைவரிடமும் நல்ல நட்புறவை கொண்டிருக்க வேண்டும் என விரும்புவோம். மேலதிகாரி முன்னிலையில் நற்பெயர், சக பணியாளர்கள் மத்தியில் அனைத்தும் தெரிந்தவனாக இருக்க வேண்டும், பொதுவெளியில் நம்மைக் குறித்து பாராட்டப்பட வேண்டும், பணி உயர்வு என ஒவ்வொன்றையும் நாம் எதிர்பார்த்துக் கொண்டே இருப்போம்.

ஆனால், அதற்கான செயல்கள் என்பது சில நேரங்களில் குறைவாகவே இருக்கும். அல்லது நாம் செய்யும் ஏதேனும் ஓர் தவறினால் அந்த முன்னேற்றம் முற்றிலும் தடைபட்டு போய்விடும். அப்படி தடை ஏற்படுத்தக் கூடிய விசயங்களில் முக்கியமானது பேசக்கூடிய சொற்கள் தான். ஓர் அலுவலகச் சூழலில் எப்படியெல்லாம் பேசக் கூடாது என தெரியுமா ?

என் பதவி என்ன தெரியுமா ?

உங்களுடன் பணியாற்றும் சக பணியாளர்கள் மத்தியில் என் பணி என்ன தெரியுமா என கேட்பதை அடியோடி நிறுத்திக் கொள்ளுங்கள். இது உங்களின் ஆளுமையை, அதிகாரத்தைக் கொண்டு அனைவரையும் அகட்டுவதைப் போல அமைந்து விடும். உங்களது ஆணவத்தை இந்த வார்த்தை வெளிப்படுத்தும். இது அலுவலக சூழலுக்கு ஏற்றதாக இருக்காது.

என்னால் முடியாது..!

உங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணியினை முழுமையாக முடிக்காமல் என்னால் முடியாது என பின்வாங்குவது மிக மோசமான நிலையாகும். மேலும், உங்களது உயர் அதிகாரி உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது உங்கள் மீதான பார்வையை மோசமாக்கிவிடும். முடிந்தவரை முயற்சி செய்து இலக்கை அடைய முடியாவிட்டாலும் என்னால் முடியாது என்னும் வார்த்தையை மட்டும் அலுவலகத்தில் பிரயோகித்து விடாதீர்கள்.

இது சரியா ?

உங்களது குழுவில் பணியாற்றும் ஒருவர் ஏதேனும் ஓர் இலக்கை அல்லது பணியை முடித்து உங்களிடம் ஒப்படைத்த நிலையில் இது சரிதான என்று நீங்கள் கேட்கும் கேள்வியானது சக வேலையாட்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும். அவர் செய்தது சரியா என பார்த்து அதை சீர்படுத்த முயற்சியுங்கள்.

என்னிடம் கூறுங்கள்!

என்னிடம் கூறுங்கள் என்பது உங்களுக்கு ஓர சாதாரண வாக்கியமாகவே தோன்றும். ஆனால், அலுவலகத்தில் பணியாளர்களிடம் உபயோகப்படுத்தும் இந்த வார்த்தையின் மூலம் உங்களது பதவியைக் கொண்டு ஆதிக்கம் செலுத்துவதையே வெளிப்படுத்தும். இது பிறர் மீது நீங்கள் கட்டளையிடுவதைப் போன்றும், உங்களது பதவியைக் கொண்டு அனைவரிடமும் நான் கூறுவதை மட்டுமே கேட்க வேண்டும் என்று அதிகாரம் செலுத்துவதைப் போன்றும் தோற்றமளிக்கும்.

எனக்கு தெரியாது…!

எனக்கு தெரியாது என்னும் சொல்லின் மூலம் ஓர் செயலை உங்களுக்கு தெரியாது என்று தான் நிங்கள் கூறியிருப்பீர்கள். ஆனால், சக பணியாளர்கள் மத்தியில் உங்களுக்கு ஒருபடி கீழே பணியாற்றும் குழுவினர் மத்தியில் ஓர் அகட்டளான பாவனையை ஏற்படுத்தி விடும். எனக்கு தெரியாது நீயே பார்த்துக் கொள் என்பதைப் போலத்தான் அது.

நான் என்ன நினைத்தேன் என்றால்..!

இது உங்களது அலுவலகத்தில், குழு உரையாடல் அல்லது பணி ஒப்படைக்கும் தருணங்களில் பொதுவாக பயன்படுத்தக் கூடிய சொல்லாகத்தான் இருக்கும். நீங்கள் ஏதேனும் தெரிவிக்கும் போது, அல்லது வெளிப்படுத்தும் போது நான் என்ன நினைத்தேன் என்றால் என உயர் அதிகாரி கூறுகையில் ஒருவித எரிச்சலையே ஏற்படுத்தும். நினைத்ததை முதலிலேயே வெளிப்படுத்தி விடுங்கள். பணி முடிந்த பின் இவ்வார்த்தையை பயண்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

இருக்கட்டும் பரவாயில்லை…!

இதுபொதுவாக அனைவரும் பயன்படுத்தக் கூடிய வாக்கியம் தான். ஏதேனும் தவறு செய்து விட்டாலோ, அல்லது நன்று செலுத்த முன்வரும் போது இருக்கட்டும் பரவாயில்லை என்ற சொல்லை பயன்படுத்துவது நல்லதே. ஆனால், அதை பயன்படுத்தக் கூடிய இடத்தை அறிந்து உபயோகிக்க வேண்டும். அலுவலர்களிடம் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் உங்களது உணர்வையே வெளிப்படுத்தி விடலாம்.

மேலும் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka Job Facebook :- Liked

Srilanka Job Facebook Group :- Joined

Srilanka Job Viber Group :- Joined

Srilanka Job Whatsapp Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இலங்கை காப்புறுத்தி (Sri Lanka Insurance) யில் பதவி வெற்றிடங்கள்

அம்மு

இலங்கை பெற்றோலிய சேமிப்பு நிறுவனத்தில் பதவி வெற்றிடங்கள்

அம்மு

இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் பதவி வெற்றிடங்கள்

அம்மு