17.7 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

வீடொன்றில் திடீரென உயிரிழந்த 4 பிள்ளைகளின் தாய்: பெரும் பரபரப்பை ஏற்பத்திய பிண்ணனி!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மோரா தோட்ட மேற்பிரிவில் உள்ள வீடு ஒன்றில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீரென இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய சுப்பிரமணியம் காஞ்சனா என்பவரே இவ்வாறு இன்று (12) காலை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார், குறித்த வீட்டினை சோதனை செய்த போது, அவ்வீட்டில் கூடை ஒன்றில் இரத்த கரைபடிந்த ஆடைகள் இருந்ததையும், அதனுடன் இணைந்ததாக சுமார் 7 மாதங்கள் மதிக்கதக்கதான பெண் சிசு ஒன்றின் சடலம் இருந்துள்ளதையும் பொலிஸார் கண்டுள்ளனர்.In

சட்டவிரோதமாக இடம்பெற்ற கருக்கலைப்பின் போது இவ்விரு உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், கருக்கலைப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் 35 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

SudarSeithy

மட்டக்களப்பில் அழிக்கப்படுவது கருவேல மரங்களா? சீமைக்கருவேல மரங்களா?; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

SudarSeithy

இன்றுமாலை இடம்பெற்ற கோரவிபத்து – சம்பவ இடத்தில் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர்

SudarSeithy