வேலைவாய்ப்பு

இன்டர்வியூல இத மட்டும் செஞ்சிங்கன்னா உங்களுக்கு வேலை நிச்சயம்!

என்னதான் கல்லூரியில் படிக்கும் போது நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் அடுத்தகட்டமாக வேலைக்குச் செல்வது அனைவருக்குமே புதுவித அனுபவத்தை அளிக்கக்கூடியதாகும். குறிப்பாக வேலைக்காகத் தயாராவதும், நேர்காணல், தேர்வுக்குச் செல்வதும் மனதில் ஒருவித பயத்தை கட்டாயம் ஏற்படுத்தி விடும். சிலர் நேர்காணலுக்காக முன்கூட்டியே பயிற்சிகள் எடுத்திருந்தாலும் இறுதியில் நம் எதிரே அமர்ந்து கேள்வி கேட்போரைக் கண்டு அஞ்சியே சொதிப்பி விடுவோம். இப்படி பலரது வாழ்வில் நடந்திருக்கலாம், நடக்கவும் நேரிடலாம். அதற்கு முன்னதாக இன்டர்வியூ-வில் வெற்றிகரமாகச் செயல்பட என்னவெல்லாம் செய்யலாம் என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

பயத்தைக் குறையுங்கள்

பெரும்பாலும் நம் தோல்விகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இந்த பயமே. முடிந்தவரை பயத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அல்லது பிறரிடம் பயமின்றி இருப்பதைப் போல செயல்படுங்கள். அதுவே உங்களுக்குள் மன தைரியத்தை மேலும் ஊக்குவித்து உங்களைத் திடமாக்கும்.

இணையத்தில் செலவிடுங்கள்

இன்டர்வியூக்கு முன் காத்திருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற கூகுளில் சென்று ஏதேனும் படியுங்கள். அல்லது ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் நேரத்தைச் செலவிடுங்கள். அவை உங்களது பொது அறிவை மேலும் பலப்படுத்தும். அன்றாட நடப்பைக் கூட அவற்றின் மூலம் அறிய முடியும்.

நிறுவனம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்

சில சமயங்களில் நேர்காணலின் போது இந்த நிறுவனம் குறித்து கூறுங்கள் என்ற கேள்வியும் கூடக் கேட்கப்படும். வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிறுவனம் குறித்து அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். மேலாளர், நிர்வாகி, தலைவர், நிறுவப்பட்ட வருடம் உள்ளிட்டவற்றை அறிந்து வைத்துக் கொள்வதன் மூலம் உங்களது மீதான மதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும்.

பணி குறித்த கூடுதல் பார்வை

வேலை கிடைத்தால் மட்டும் போதும், கொடுத்த வேலையை அப்படியே செய்வேன் என்பதைப் போல பதில் அளிக்காமல் தனக்கான பணியை, நிறுவனத் தயாரிப்பை அடுத்த கட்டத்திற்கு முன்நோக்கி எடுத்துச் செல்லும் வகையிலான பதில்களைக் கூறுங்கள். வேலையளிப்போரே இதில் மெய் சிலிர்த்துவிடுவார்.

தன்னம்பிக்கை

இந்த இன்டர்வியூ உங்களுக்கு முதன் முறையாக இருந்தாலும் கூட அதனை வெளிக்காட்டாமல் இருங்கள். நிமிர்ந்து அமர்தல், தெளிவாகப் பதில் அளித்தல் உள்ளிட்டவற்றின் மூலம் உங்களது எதிரே இருப்பவரைக் கவர்ந்திழுங்கள்.

தவறாகக் கூறாதீர்

ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளீர்கள் என்றால் பழைய நிறுவனத்தைக் குறித்து எக்காரணத்தைக் கொண்டும் தவறாகக் கூறிவிடாதீர்கள். ஏனெனில் பிற்காலத்தில் தற்போது விண்ணப்பித்துள்ள நிறுவனம் குறித்தும் நீங்கள் தவறாகக் கூறலாம் என்ற மன நிலையை ஏற்படுத்தி விடும்.

தேவையின்றி பேசாதீர்கள்

நேர்காணலின் போது எனக்கு அது தெரியும், இது தெரியும் என்ற தேவையற்ற பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். உங்களுக்குத் தெரிந்தால் கூட அதுகுறித்தான முழுத் தகவலையும் வெளிப்படுத்தாமல் ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் உங்களிடம் கேட்கப்படும் கேள்விகள் வளர்ந்துகொண்டே போகும்.

உங்களைப் பற்றிக் கூறுங்கள்

பெரும்பாலும் நேர்காணல் தேர்வின் போது கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று தான் உங்களைப் பற்றிக் கூறுங்கள் (Tell me about yourself). இக்கேள்விக்கு உங்களிடம் உள்ள சிறந்த குணங்களை மட்டுமே கூறுங்கள், பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை போன்ற தனித்திறன்களை மட்டும் கூறுங்கள். முடிந்தவரை உங்களது வீக்னெஸை சொல்லாமல் இருங்கள்.

ஆடையில் கவனம்

ஆள் பாதி ஆடை பாதி என்பதைப் போலவே நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் போதும், தேர்விற்குச் செல்லும் போதும் நன்றாகப் படித்திருந்தாலும், ஆடையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒருவேலை நீங்கள் சந்தைப் படுத்துதல் போன்ற நிறுவனத்திற்கு தேர்விற்குச் சென்றுள்ளீர்கள் என்றால் சிறந்த ஆடை அணிந்திருப்பது கட்டாயம்.

நேரான பார்வை

உங்களிடம் நேர்காணலில் ஈடுபட்டுள்ள வேலையளிப்போரின் கண்களை மட்டுமே பார்த்துபேசுங்கள். நீங்கள் கேள்விகளுக்கு தவறான பதில் அளித்தாலும் உங்களது கண்களின் மூலம் வெளிப்படும் உணர்வு சில சமயங்களில் கூடுதலான மதிப்பெண்களை இடும். குறிப்பாக, நீங்கள் எந்த மனநிலையில் உள்ளீர்கள், உங்களது சிந்தனை உள்ளிட்டவற்றைக் கண்களின் மூலமே அறிந்துகொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka Job Facebook :- Liked

Srilanka Job Facebook Group :- Joined

Srilanka Job Viber Group :- Joined

Srilanka Job Whatsapp Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஆபீசுல இப்படி எல்லாம் பேசுனிங்க அவ்வளவு தான்!

அம்மு

இந்த விசயம் மட்டும் தெரிந்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

அம்மு

வீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா ? இதோ உங்களுக்காக வெப்சைட்டுகள்!

அம்மு