பாகிஸ்தானில் 60 இந்துக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் மால்டி பகுதியில் குறைந்தது 60 இந்துக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை நகராட்சித் தலைவர் முன்னிலையில் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள் 4.5 மில்லியன் மக்கள் உள்ளனர். அவர்கள் பாகிஸ்தானின் மக்கள்தொகையில் 2 சதவீதத்திற்கும் அதிகமானவர்களாக உள்ளனர். அதில் பெரும்பாலானோர் சிந்து மாநிலத்தில் வாழ்கின்றனர்.
நகராட்சித் தலைவர் அப்துல் ரவூப் நிஜாமணி வெகுஜன மதமாற்ற செயல்முறைக்கு வசதி செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பேஸ்புக் பதிவில், “இன்று, 60 பேர் இஸ்லாத்தை எனது கண்காணிப்பில் ஏற்றுக்கொண்டனர், தயவுசெய்து அவர்களுக்காக ஜெபிக்கவும்”ம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நிஜாமி பகிர்ந்த ஒரு வீடியோவில், ஒரு இஸ்லாமிய மதகுருவுடன் இந்துக்களின் குழு கலிமாவை ஓதிக் காண்பிப்பதையும் அவர்களின் முழு மாற்றத்தை உறுதி செய்வதையும் காட்டுகிறது.
மற்றொரு வீடியோவில், அந்த மதகுரு மதமாறிய மக்கள் முதன்முதலில் நமாஸைப் படித்ததாகக் கூறகிறார். அதில் அந்த மதகுரு, மதமாறிய மக்களிடம் “ஒரு முஸ்லீம் நபரின் வாழ்க்கையில் ஒரே நோக்கம் அல்லாஹ்வை மகிழ்விப்பதாகும். பின்னர், அவரது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறும். அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மட்டுமே முன்னேறுகிறது, ”என்று போதிக்கிறார்.
Fresh case of alleged mass conversion reported in #Pakistan's Sindh.
Pradeep Dutta with analysis. pic.twitter.com/9kO54qeNfj
— TIMES NOW (@TimesNow) July 11, 2021
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரஸாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.