சுற்றுலா

“இசுருமுனிய காதலர் ​ஜோ​டி” சுற்றி பார்க்கலாம்

அனுராதப்புர மாவட்டத்தில் அமையபெற்ற வெஸ்ஸகிரி விகாரையே, தற்பொழுது “ இசுருமுனிய விகாரை” (Isurumuniya Rock Temple) என அழைக்கப்படுகின்றது. இந்த இசுருமுனிய விகாரையானது, இங்கு இருக்கும் செதுக்கல் கல்லொன்றால் பிரசித்திபெற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கல் “இசுருமுனிய காதலர் ​​ஜோடி” என பொதுமக்களால் பொதுவாக அழைக்கப்படுகின்றது. இதில் உள்ள ஆணினதும் பெண்ணினதும் வடிவமானது இந்துக்களால் சிவ பார்வதி வடிவம் என்றும், பௌத்தர்களால் இலங்கையை ஆட்சி செய்த, வரலாறு போற்றும் மன்னனான துட்டகைமுனுவின் மகனும் ​அவனது மனைவியும் என நம்பப்படுகின்றது.

மேலும் இங்கு காணப்படும் இன்னு​மொரு கல்லானது, துட்டகைமுனு மன்னனின் நீதிமன்ற காட்சியை சித்தரிக்கும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட இரு கற்களும் 8 ஆம் நூற்றாண்டுக்குரியவை எனக் கருதப்படுகின்றன.

அத்துடன் இவ்விகாரையானது, மலையின் உச்சியில் ஒரே பாறையால் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மலை விகாரையின் நுழைவாயிலில் குளமொன்று காணப்படுவதுடன், யானைகள் நீராடுவது போன்ற காட்சிகளுடனான செதுக்கல்களும் மற்றும் குதிரை தலையுடனான மனிதனின் உருவமும் காணப்படுகின்றமை இவ்விகாரையின் கலையம்சத்தை மேலும் வெளிகாட்டி நிற்கின்றது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த இசுருமுனிய விகாரையை உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக சென்று பார்வையிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் சுற்றுலா சொல்ல கூடிய இடம் பற்றி அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Travel Facebook :- Liked

Travel Facebook Group :- Joined

Travel Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

’எழில் மிகுந்த இயற்கை துறைமுகம்’ சுற்றி பார்க்கலாம்

அம்மு

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் புறாத் தீவு

அம்மு

“மிஹிந்தலை” சுற்றி பார்க்கலாம்

அம்மு