வேலைவாய்ப்பு

வெற்றிக்கு வித்திடும் லீடர்ஷிப்!

இன்றைய காலகட்டத்தில் எல்லோருமே மேலே வருவதற்காக பரபரப்பாக ஓடிக்கொண்டும், பம்பரமாக சுழன்று கொண்டும் இருக்கிறார்கள்.

ஆனால் நம்மில் எத்தனை பேர் இயங்குவதற்காகவும், இயக்குவதற்காகவும் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம்?

நாம் இயக்குகிறோமா இல்லை… இயங்குகிறோமா என்ற கேள்விக்கு பெரும்பாலோனர்களின் பதில் இயங்குகிறோம் என்பதாகத்தான் இருக்கும்.

இது ஏன்? என என்றைக்காவது யோசித்ததுண்டா?

அதெல்லாம் நமக்கெதுக்கு சார், வந்தேமா, வேலையை பாத்தோமா, சம்பளத்தை வாங்கினோமா என்று எறும்புகளாக சுறுசுறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

முடியும், முயற்சித்தால் நீங்களும் ஒரு நாள் லீடராகலாம்.

உறவுகளை எப்படி கையாள்கிறோம் என்பதில் தொடங்கி நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும் எவ்வாறு வழிநடத்துகிறோம் என்பது வரை கவனம் செலுத்தினால் போதும் விரைவில் வெற்றிகரமான தலைவராக ஜொலிக்க முடியும்.

பொதுவாக ஒரு லீடர் என்பவரை மக்களோ, நிர்வாகமோ தேர்ந்தேடுப்பதற்கு முன் அவர்களின் இலக்கு என்ன என்பதில் கவனம் செலுத்துகின்றனர். இப்போது நானும் லீடராக வேண்டும் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா. இதே சில யோசனைகள்…

1. முதலில் உங்களுக்கான கனவையும், குறிக்கோளையும் வரையறை செய்யுங்கள்.

2. உங்களுடைய திறனையும், அதை மேல் நோக்கிச் கொண்டு செல்லும் யுக்தி என்ன என்பதையும் அடையாளம் காணுங்கள்.

3. உங்களின் திறன்களை மேம்படுத்த என்ன தேவை என்பதை ஆராயுங்கள்.

4. உங்களை அடையாளப்படுத்துங்கள்; உங்களுடைய தயாரிப்பை செய்தியாக்குங்கள்.

5. உங்களை முதலில் விற்பனை செய்ய கற்றுக்கொள்ளுங்கள் பின் பிராண்டை விற்பனையாக்குங்கள்.

மகிழ்ச்சி:

பொதுவாக ஒரு நிறுவனமாகட்டும், மக்களாகட்டும் லீடர் என்றால் உற்சாகமும் மகிழ்ச்சியுமான ஆற்றல் உங்களுக்குள்ளே இருக்க வேண்டும். எனவே, காலைப்பொழுதை யோகா, மெடிட்டேஷன் என உற்சாகமாக தொடங்குங்கள், பின் அடுத்தடுத்த வேலைகளை ஆரம்பியுங்கள்.

ரிஸ்க்:

உங்களின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஆராய மறக்காதீர்கள். ஒரு புதிய முறையை ஆராய்ச்சி செய்து பார்ப்பதும் தலைமைத் திறன்களின் வரிசையில் ஒன்றுதான். இதற்கு முன் அதன் சாதக, பாதகங்களை கவனித்து அதன் நுணுக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்.

திட்டமிடுதல்:

தலைவனுக்கு திட்டமிடல் அவசியம். ஒட்டு மொத்த வேலைகளில் எதை யாரிடம் கொடுப்பது, எதை முதலில் செய்வது என்பதை தெளிவாக திட்டமிட கற்றுக் கொள்ளுங்கள். வெற்றியே, தோல்வியோ அவற்றுக்கான காரணங்களை அலசி ஆராய்வது அவசியம். தோல்விகளை வெற்றிக்கான முகவரிகளாக மாற்ற எத்தனியுங்கள்.

ரோல் மாடல்:

எப்போதும் டல்லடித்த முகபாவனைகளோடு இருக்காமல் உற்சகமாக உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது தோற்றம் உங்களைப் பற்றிய நல்லதொரு ஆளுமையை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். பார்த்தால் இது போல் வேலை பார்க்க வேண்டும் என்று கூறும் வகையில் முன்மாதிரியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka Job Facebook :- Liked

Srilanka Job Facebook Group :- Joined

Srilanka Job Viber Group :- Joined

Srilanka Job Whatsapp Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நீங்கள் பகுதி நேரம் வேலை செய்து சம்பாதிக்க வேண்டுமா ? இதோ உங்களுக்காக…

அம்மு

நீங்களும் இங்கிலீசுல பீட்டர் விடணுமா ? இந்த சேனல பாருங்க!!

அம்மு

இலங்கை டெலிகொம் நிறுவனத்தில் பதவி வெற்றிடம்

அம்மு