கல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த பிக்கு அதிகளவில் பணத்தை கொடுத்து அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இந்த சிறுமிக்காக பெருந்தொகை பணத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களில் விசேட மருத்துவ நிபுணர், பிரதேச சபை ஒன்றின் தலைவர், சில பொலிஸ் அதிகாரிகள், பாடகர், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விடயத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இணையத்தின் ஊடாக குறித்த சிறுமி இவ்வாறு வன்கொடுமைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.