கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோணாவில் கிழக்கு மற்றும் வட்டக்கச்சி சிவிச்சென்ரர் பகுதிகளில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட புதிய வீடுகள் இரண்டு நேற்று (12) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டிற்குட்பட்ட கோணாவில் கிழக்குப்பகுதியில் வசிக்கின்ற முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட பெண் பயனாளி மற்றும் வட்டக்கச்சி சிவிச்சென்ரர் பகுதியிலும் வாழும் கூலித்தொழிலாளி குடும்பத்திற்கு இவ்வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக 57வது படைப்பிரிவினால் குறித்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்க, கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன், கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகாரன் கலந்து கொண்டு வீட்டினை குடும்பத்தினரிடம் கையளித்தார்கள்.
தொடர்ந்து குடும்பத்தினருக்கான உணவு பொதிகளும், அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.