சுற்றுலா

“கண்டி – தலதா மாளிகை” சுற்றி பார்க்கலாம்

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் அமையபெற்றுள்ள மிகப் பிரம்மாண்டமானதும், பௌத்தர்களின் புனித இடமுமான தலதா மாளிகை, இலங்கையின் பிரசித்தி பெற்ற விகாரை ஆகும்.

புத்தபகவானின் புனித தந்தத்தாதுவானது, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, இவ்விகாரையில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்புனித தந்தத்தாதுவை வழிபட வருகை தரும் மக்கள் ஏராளமாகும். அதுமட்டுமின்றி வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் இங்கு அதிகமாக வருகை தந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள் நுழைகையில் பிரதான மண்டபத்தின், பெரியளவிலானத் தூண்கள் இரு பக்கங்களிலும் காட்சியளிப்பதானது, பார்ப்பவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளன. சற்று உள்ளே செல்கையில் காணப்படும் சிறிய மண்டபமானது, பாரம்பரிய இசை வாத்தியங்கள் அனைத்தையும் கொண்ட மண்டபமாக விளங்குகின்றது. இவை இவ்விகாரையின் அழகை மேலும் மெருகூட்டும் வகையில் காணப்படுகின்றன.

இங்கு வருடா வருடம் பௌத்த மக்களினால் “எசல பெரஹெர” வெகுவிமர்சையாக, மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஏராளமான உள்ளூர் மற்றும் ​வெளியூர் மக்கள் இதில் கலந்துகொள்வது வழமையாகும்.

கண்டி தலதா மாளிகையின் வரலாற்று சிறப்புக்கள் காரணமாக, “உலகின் பாரம்பரிய நகரம் கண்டி” என யுனேஸ்கோவினால் (UNESCO) அறிவிக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.

மேலும் சுற்றுலா சொல்ல கூடிய இடம் பற்றி அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Travel Facebook :- Liked

Travel Facebook Group :- Joined

Travel Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

’எழில் மிகுந்த இயற்கை துறைமுகம்’ சுற்றி பார்க்கலாம்

அம்மு

’கங்காராமய விகாரை’

அம்மு

அழியாப் புகழைக் கொண்ட “சிகிரியா” சுற்றி பார்க்கலாம்

அம்மு