14.8 C
Manchester
3 July 2022
Image default
உலகம்

நாசா வெளியிட்டுள்ள காணொளி: பூமிக்கு வந்த ஏலியன்

யுஎஃப்ஓ என்பது அடையாளம் தெரியாத வானில் பறக்கும் பொருட்கள் ஆகும். அடையாளம் குறிப்பிடப்படாத பொருட்கள் கண்டறியும் போதெல்லாம் புலப்படும் ஒரே வார்த்தை யுஎஃப்ஓ என்பதுதான். காரணம் யுஎஃப்ஓ என்பது ஏலியன்கள் பயன்படுத்தப்படும் விண்கலன்களை குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே ஒரு வட்டத்தை உருவாக்கும் யுஎஃப்ஓ-க்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளானது பரவலாக பரப்பப்பட்டு சமூகஊடகங்களில் யுஎஃப்ஓ குறித்து விண்வெளி ஆர்வலர்கள் உட்பட பலரிடமும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. நாசாவின் சமீபத்திய நேரடி ஸ்ட்ரீமிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

அடையாளம் காணப்படாத 10 பறக்கும் பொருட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றி வருகிறது. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேற்புறத்தில் விண்வெளி ஆய்வு நிலையம் இருந்தபோது அதை இந்த பொருட்கள் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த யுஎஃப்ஓக்கள் நேரடியாக உண்மையில் கைப்பற்றப்பட்டது.

உருண்டை போன்ற பொருட்களை கேமராவில் கண்ட பிறகு கவனமாக இந்த யுஎஃப்ஓக்களை காட்சி படுத்தியுள்ளனர். இருப்பினும் இவை அனைத்தும் ஊகம் என கூறப்படுகிறது. காரணம் இதுகுறித்த நாசாவின் பார்வையை வெளியிடவில்லை. இருப்பினும் இந்த காட்சிகள் பரவலாக பரப்பப்பட்டு சமூகவலைதளங்களில் யுஎஃப்ஓ குறித்து விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

நாசாவின் நேரடி ஸ்ட்ரீமில் ஐஎஸ்எஸ் அருகே சுற்றிக் கொண்டிருந்து ஃப்ளீட் ஆஃப் யுஎஃப்ஓ-க்களை கழுகு பார்வை கொண்ட விண்வெளி ஆர்வலர் கண்டறிந்துள்ளார். யூஎஃப்ஓ ஹண்டர் Mr.MBB33 இதை கண்டறிந்துள்ளார். நாசாவின் நேரடி ஸ்ட்ரீமில் இது காணப்பட்டுள்ளது. இந்த நேரடி ஸ்ட்ரீம் தொடர்ச்சியாக இருந்த போதும் இதை உன்னிப்பாக கவனித்தவர் மிக சிறந்த விண்வெளி ஆர்வலராக இருப்பார்.

யுஎஃப்ஓ ஹண்டர் இதுகுறித்து கூறுகையில், இது தெற்கு அட்லாண்டிற்கு மேலே உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து காலை 8:30 மணியளவில் பதிவு செய்யப்பட்டது. உருண்டை போன்ற பொருட்கள் கேமராவை கடந்து செல்வதை காட்டும் காட்சிகளை கவனமாக பார்த்தபின் சதி கோட்பாளர்கள் இந்த முடிவுக்கு வந்தனர்.

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே ஒரு வட்டத்தை உருவாக்கி 10 பொருட்கள் சுற்றிக் கொண்டிருந்தன. யூடியூப்பில் அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை யுஎஃப்ஓ ஹண்டர் வெளியிட்டார். தொடர்ந்து பல விண்வெளி கோட்பாட்டாளர்கள் யுஎஃப்ஓ ஹண்டர் வீடியோ மற்றும் அவர் சுட்டிக்காட்டிய விஷயம் குறித்து கருத்து தெரிவித்து விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

19 வயதில் கிடைத்த ரூ 260 கோடி பணம்! சில வருடத்தில் அனைத்தையும் இழந்து நடுரோட்டுக்கு வந்த இளைஞன்… எச்சரிக்கை செய்தி

SudarSeithy

உக்ரைனிடம் சிக்கிய ரஷ்ய வீரர்களின் பரிதாப கதி: பரபரப்பு வீடியோ காட்சி!

SudarSeithy

பாகிஸ்தானில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

SudarSeithy