திருமணமான இரண்டு மாதத்தில், காதலனுடன் புகைப்பிடித்து விளையாடிய காணொளி லீக் ஆனதால், புதுப்பெண் கணவர் வீட்டினரால் துரத்தப்பட்டுள்ளார்.
பார்பேட்டா மாவட்டம், திக்ஜனி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
நன்றாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையில், காணொளி ஒன்று சூறாவளியாய் வந்து இறங்கியுள்ளது. ஆம் திருமணத்திற்கு முன்பு காதலருடன் விளையாட்டாக புகைப்பிடித்துள்ளார். இதனை காணொளியாக இருந்த நிலையில், தற்போது நபர் ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணொளி பெற்றோர் மற்றும் கணவர் வீட்டினரும் அவதானித்ததால், தற்போது இருவீட்டினரால் வெறுக்கப்பட்ட அப்பெண் வீட்டை விட்டே துரத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தன் முன்னாள் காதலரின் வீட்டிற்குச் சென்ற அப்பெண், அங்கு காதலனின் பெற்றோராலும் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுது காவல் துறையினரிடம் அப்பெண் புகார் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த காவலர்கள், அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பெண்ணைத் தாக்கிய அவரது காதலர் வீட்டினரிடமும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.